மாம்பலச்சாலை தாத்தாசாரியார் கார்டனில் குமரன் பன்மாடக்குடில் கட்டப்பட்டது 2004-ல். இக்கட்டிடம் கட்டப்பட்டதில் இருந்து 16 குடியிருப்புகளுக்கு இது வரை வரி விதிப்பு செயப்படவில்லை.
இக்கட்டிடம் திட்ட அனுமதி முடிந்தபிறகு தான் காலம் கடந்து கட்டப்பட்டுள்ளது. அனுமதி காலாவதியானபிறகு கட்டப்பட்ட இந்த கட்டிட்த்திற்கு நகராட்சி நிர்வாகத்தால் உறிய காலத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது சம்மந்தமாக தகவல் அறியும் சட்ட்த்தின் படி 23-3-2010-ல் கேட்கப்பட்டதும் நடவடிக்கை எடுப்பதாக பெயருக்கு நோட்டீஸ் நகராட்சியால் கொடுக்கப்பட்ட்து. மேலும் நகராட்சி நிர்வாகம் “குமரன் பிளாக் உரிமையாளர்கள் பதிவு ஆவணங்கள் ஏதும் சமர்ப்பிக்கப்படாதால் வரி விதிக்கபடவில்லை” 21-4-2010-ல் தெரிவித்தார்கள். மீண்டும் தகவல் அறியும் உறிமைச்சட்டத்தின் படி 8-5-2010-ல் கேட்கப்பட்டதற்கு “ கட்டிடம் கட்டப்பட்ட காலத்தில் கட்டிடம் கட்ட அனுமதி வேண்டி புதிப்பிக்கப்படவில்லை”, சில குடியிருப்புகளுக்கு தற்பொழுது விதிக்கபட்டு சிறு தொகை வசூலிக்கப்பட்டது என்றும் “புதிய வரிவிதிப்பு செய்ய கட்டிட உரிமையாளர்களுக்கு பத்திர நகல், காலிமனை வரி செலுத்திய நகல் சமர்ப்பிக்க மனுதார்ருக்கு அறிவிப்பு அனுப்பட்டுள்ளது(ந்.க.எண் அ3/4460/2010 13-04-2010)” மேலும் “அனைத்து மனுதாரர் மின் இணைப்பு பெற்ற தேதியில் இருந்து சொத்து வரி விதிக்கப்படுவதால் மாநகராட்சிக்கு இழப்பீடு ஏதுமில்லை.வரிவிதிப்பீடு செய்யும் பொழுது த்ண்ட்த்தீர்வை ஏற்படுத்தப்படும்” சம்மந்தப்பட்ட வருவாய் உதவியாளருக்கு விளக்கம் கோரி குறிப்பாணை வழங்கப்படுள்ளது.”
இந்த ஏழு வருடங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவிட்டு, கட்டுமானதாரருடன் உறவாடிவிட்டு-----
எனினும் இது நாள்வரை 16 குடிய்ருப்புகளுக்கு வரிவிதிக்கப்படவில்லை. இந்த ஏழு வருடங்களுக்கு நகராட்சி நிர்வாகத்திற்கு தோராயமாக இழப்பீடு ரூபாய் 1,70,000/ஏற்பட்டுள்ளது.=
பெயரளவில் நடவடிக்கை என்று தற்பொழுது செயல்பட்டு வருவது உழியர்களை காப்பாற்றவும், கட்டுமானதாரரை சுகப்படுத்தவும் மட்டுமே . எல்லாம் சுயலாபத்திற்கு என்றே------
No comments:
Post a Comment