எங்கள் போராட்டத்தின் கண் ஒரு கடிதமும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டாமல் உள்ளதின் கண் அந்த கடித்தையே இங்கு அனைவருக்கும் தெளிவடையும் பொருட்டு அளிக்கப்படுகின்றது.
. Regd.no.236/2007
THATHACHARIOR ARCADE OWNERS’ ASSOCIATION
S-4, Sri Bajaj Block, Thathacharior Garden
Mambala Salai, Trichy-620005
President: M.Jaganathan Secretary: R.Ilangovan Treasurer: R.Manivannan
T A O A/PRES/D505/2010/DATED 09-08-2010
அனுப்புதல் : - ம.செகநாதன்.பி.ஈ.
தலைவர்,
தாத்தச்சாரியார் ஆர்கேட் ஓன்ர்ஸ் அஸோஸியேஸன்,
எண்.6,இரண்டாவது மாடி,ஆண்டாள் பிளாக்,
தாத்தாச்சாரியார் கார்டன்,மாம்பலச்சாலை,திருச்சி-5
பெருநர் :- The Commissioner,
Municipal administration,
Ezhilagam annexure building,
VI floor,Chepauk,
Chennai-600005.
ஐயா,
பொருள்:-திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, ஸ்ரீரங்கம் கோட்டம், தாத்தாச்சாரியார் கார்டன் அனுமதியற்ற மனைப்பிரிவுகள்-அத்துமீரல்கள்-அரசு உத்திரவு கீழ்படியாமை-நீதிமன்ற அவமதிப்பு-நடவடிக்கை சம்பந்தமாக:-
பார்வை:-
1. T.S.2327/A1 TO A10- திம்மராய சமுத்திரம் கிராமம்-வார்டு 3-பிளாக் எண். 44, ஸ்ரீரங்கம் கோட்டம் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி.
2. .நீதிமன்ற் வழக்கு jmc iii வழக்கு எண். 46/2010.
3. எங்கள் சங்க தகவல் எண் 9/10-06-2010.
4. புகார் கடிதங்கள் 07-07-2010 மற்றும் 02-08-2010.
5. காவல்துறை ஆய்வாளர் திருச்சிராப்பள்ளி 21-07-2010 தேதியிட்ட புகார் கடிதம்.
6. உதவி ஆணையர்-ஸ்ரீரங்கம் கோட்டம் அவர்களுக்கு 15-07-2010.-ல் அனுப்பிய தந்தி தந்தி
7. 14-07-2010 தேதியில் போனோகிராம் –துனை சார்பதிவாளர் ஸ்ரீரங்கம் அவர்களுக்கு.
8. G.O..125 dated 27MARCH 1996 AS AMENDED VIDE THEIR LETTER DATED 23 APRIL 1996.
தாத்தாச்சாரியார் ஆர்கேட் ஓன்ர்ஸ் ஆஸோஸியேசன் சமர்ப்பிக்கும் மனு,
எங்கள் அர்கேட் G.O..125 dated 27MARCH 1996 AS AMENDED VIDE THEIR LETTER DATED 23 APRIL 1996 மூலம் திரு ஜெகனாத அய்யங்கார் அவர்கள் லே-அவுட் அனுமதிபெற்று, ஒரு தனியார் காலனியாக அமைக்கப்பட்டது. திட்டத்தின்படி எந்த பொது வசதிகளும் கடந்த 13 வருடங்களாக செய்துதரப்படவில்லை. இதன் காரணமாக சங்கம் அமைத்து பொது வசதிகளுக்காக எங்கள் முழு உழைப்பையும் ஈடுபாட்டுடன் செய்து வருகின்றோம். எங்கள் நியாயமான நூற்றுக்கணக்கான வேண்டுதல்கள் அனைத்தும் இந்த திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நிர்வாகத்தில் செல்லாதவைகளாகிவிட்டன.
எனவே உயர்நீதி மன்றத்தை நாடி உத்திரவு பெற்றும், நகராட்சி நிர்வாகம் எங்களை முழுமையாக நிராகரித்துவிட்டதினால், தற்பொழுது மறுபடியும் உயர்நீதி மன்றத்தை நாடவைத்துள்ளார்கள்.
இந்நிலையில் எங்கள் தனியார் காலனியில் உள்ள தனியார் சாலையை ஆக்கிரமித்து திரு ஜெகனாத அய்யங்கார் அவர்கள், ஏஜண்டுகள் மூலம் தில்லுமுல்லு, செய்துமுறையான அனுமதி பெறாமல், நகராட்சி எல்லைக்குள் உள்ள T.S.2327/A1 TO A10- பகுதியில் மனைபிரிவுகள் அமைத்து விற்பனையை தொடங்கினார்கள். இந்த எங்கள் தனியார் சாலை ஆக்கிரமிப்பையும், சாலை ஓர மரங்களை வெட்டியும், சேதப்படுத்தியும் செய்யப்பட்டது, சம்பந்தமாக 4 புகார்கள் {1. 1994790 தேதி 19-07-2009, 2. 1829220 தேதி 15-011-2009, 3. 31-01-2010 தேதியிட்ட புகார், மற்றும் 4. 21-07-2010 தேதியிட்ட புகார்} ஆகியவைகளை காவல் நிலையித்தில் சமர்ப்பித்தும், நாங்கள் அலைந்த்துதான் மிச்சம். எந்த விசாரனையும் நடைபெறாமலே கட்டிவைத்து விட்டார்கள். எங்கள் பொதுநல நோக்கு செயல்கள் அனைத்தும் விரயமாகிவிட்டது மட்டுமல்லாமல், வேண்டாத விழமிகளால் நாங்கள் அவமான்ப்படுத்தப்பட்டோம். பாதை ஆக்கிரமிப்பு, திட்டல், அடிக்கவந்தது அனைத்தையும் விழமிகளிடம் மூத்த குடிமகன்களாகிய நாங்கள் பொருத்துகொண்டு அவமானப்பட வேண்டியாதாகி விட்டது..
இந்நிலையில் உள்ளூர் திட்டகுழுமம் உத்திரவின் பேரில் நகராட்சி
நிர்வாகம் F1/10902/09 நாள் 27-11-2009-ல், விளை நிலத்தை முன்பிருந்த நிலைக்கே கொண்டு வரவேண்டும் என்றும், மற்றும் உடனடியாக முறையான அனுமதி பெறவேண்டும் என்றும் உத்திரவு இட்டு மாநகராட்சி சட்டத்தின் படி நடவடிக்கை எடுப்பதாக திரு ஜெகனாத அய்யங்கார் மற்றும் திரு விசுவநாத் ரெட்டியார் ஆகியவர்களுக்கு அறிவிப்பு அளித்ததின் பேரில் J M C III நீதி மன்றத்தில் 46/2010 {22-01-2010}-ல் வழக்கு தொடர்ந்து ரூபாய் 1000/= தலா தண்டம் செலுத்த நீதி மன்றத்தில் உத்திரவிடட்தின் பேரில் தண்டம் செலுத்தியுள்ளார்கள். தொடர்ந்து அவர்கள் நீதிமனற உத்திரவை மீறி செயல்பட்டதினால் தொடர் நடவடிக்கை எடுத்து நீதி மன்ற வழக்கு 15-04-2010-ல் தாக்கல் செய்துள்ளார்கள்.
இந்நிலையில் எந்த சட்டரீதியான உத்திரவையும் மதிக்காமல் மீண்டும் மனைகள் விற்பனை செய்வதுடன், சாலை அமைப்பதை தீவிரமாக நிருத்தாமல் செயல்பட்டார்கள்.
உதவி இயக்குநர் அவர்களும் 25-01-2010 தேதி உத்திரவில் உதவி பத்திர பதிவு அதிகாரி அவர்களுக்கு இந்த T.S.2327/A4 பகுதியில் அனுமதியற்ற மனைகளை பதிவு செய்ய வேண்டாம் என்று தெரிவித்து எழுதியுள்ளார்கள். J M C III நீதி மன்றத்தில் 46/2010 -ல் வழக்கு நிலுவையில் உள்ளது. தெரிந்தும் பத்திர பதிவு அதிகாரி சட்ட உத்திரவிற்கு புரம்பாக சுய லாபத்தின் நோக்கில் மனைகளை பத்திர பதிவு செய்துள்ளார்கள். மேலும் 14-07-2010 அன்று நான் தொலை பேசியில் பத்திர பதிவு அலுவலர் அவர்களிடம், உதவி இயக்குநர் அவர்களின் உத்திரவை எடுத்து சொல்லியும் மேலும், போனோகிராம் ஒன்று கிழ்கண்டவாறு,
TO:- THE SUB REGISTRAR. PH:2431544. ””STOP REGISTRATION OF PLOTS IN T.S.NO..2327/A1 PART, SINCE COURT CASE OF CONTINUANCE AFFENCE PENDING AT J M C III, VIDE. PR.NO.46/2010 JE DN AND AS PER DIRECTION OF LPA/ந.க.எண். 1618/09 தி.2.திரு-2 நாள் 25-01-2010”” பத்திரபதிவு அதிகாரிக்கு at 3.20.pm on 14-07-2010 கொடுத்தும், சட்டத்திர்கு புறம்பாக, மேற்கொண்டு, 14-07-2010 அன்று மேற்படி சர்வே எண்ணில் 5 மனைகள் பத்திரபதிவு செய்துள்ளார்கள். அவகளாவன , பதிவு எண்கள். 1844,1845,1846,1847,1848 அகும்.
இந்நிலையில் JE/civil/srirangam zone Thiru. LAKSHMANAMOORTHY -க்கும் ASSISTANT COMMISSIONER SRIRANGAM ZONE – அவர்களுக்கும் 14-07-2010 மதியம் 12.12 -க்கு sms செய்தி அனுப்பினேன்.
“violating your order and court orders, J.BHARATH IS DEVOLOPING CARRYING OUT WORKS IN T.S.NO.2327/A4 PART THIMMARAYASAMUTHTHIRAM,TODAY.”
மேலும் தொலைபேசியில் டிப்பர் மற்றும் பொக்கலைன் வேலை செய்து கொண்டிருப்பதையும் தெரிவித்தேன். நேரிலும் சென்று JE/civil/ srirangam அவர்களிடம் தெரிவித்தற்கு “என்னால் எதுவும் செய்யமுடியாது” என்றும், ”கடந்த மூன்று அண்டுகளாக நீங்க அனுப்பிய கடிதங்கள் அனைத்தையும் கட்டி வைத்துள்ளேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. E.B. யில் காசு வாங்காம எதுவும் செய்வதில்லை. உங்களுக்கு தெரியாதா?.” என்றும், தெரிவித்து தன் பணியை முழுமையாக தவிர்த்து, குற்றவாளிகளுக்கு சுய லாப நோக்கத்தோடு உடந்தையாக செயல்பட்டுள்ளார்கள். அதன் பிறகு என் அலை பேசி அழைப்பையும் ஏற்பதில்லை.
அதை தொடர்ந்து தந்தி 15-07-2010 கலை 11.-38 மணிக்கு அனுப்ப்பட்ட்து. தந்தி நகல்:- ”TO.
THE ASSISTANT COMMISSIONER, SRIRANGAM ZONE, TRICHIRAPALLI CORPORATION.
SIR,
TODAY, 15-07-2010 THIRU.VENUGOPAL IS CARRYING OUT THE STREET FORMATION WORKS DESPITE YOUR ORDERS AND THE COURT CASE AT JMC III NO.46/10 IN T.S.NO.2327/A4 PART J.BHARAT LAND. REQUEST TO TAKE ACTION AND ALSO SEIGE THE VEHICLE -- SD.
JAGANATHAN.
THATHACHIYAR ARCADE OWNERS ASSOCIATION,
MAMBALACHALAI, TRICHY.-
Copy to 1. THE COMMISSIONER, TRICHIRAPALLI CORPORATION.
2. THE JE CIVIL, SRIRANGAM ZONE, TRICHIRAPALLI CORPORATION.
3. THE ASSISTANT DIRECTOR, LOCAL PLANING AUTHORITY, TRICHIRAPPALLI. NO.10. WILLIAMS ROAD, CONTONEMENT.
உதவி செயற் பொறியாளர்/பொது ஸ்ரீரங்கம் கோட்டம் அவர்கஐ சந்தித்து நேரில் பேசியபொழுது அவர்களும் ” நான் ஈ.பி –யில் ஒரு கம்பத்தை நகர்த்தி நட்டு மூன்று பேஸ் சப்பளை பெறுவதர்க்கு ரூபாய். 15,000/= {பதிணைந்தாறாயிரம்} லஞ்சம் கொடுத்துதான் பெற்றேன்”. என்று தெரிவித்து ” பார்க்கலாம்” என்று கூறி தங்களுக்கே உறிய பாணியில் அனைத்து குற்றவாளிகளுக்கும் உடந்தையாக செயல்பட்டுள்ளார்கள்.
திரு.வேணுகோபால் மற்றும் ஜெகநாத அய்யங்கார் அவர்களும் அணைத்து வேலைகளையும் நீதிமன்ற் வழக்கிற்கு விரோதமாகவும், அனைத்து நியாயமான அரசு உத்திரவிற்கும் கீழ்படியாமல், உதாசீனப்படுத்தி, டிப்பர் மூலம் மண் அடித்தும், பொக்கலின் மூலம் நிரவியும், செய்தார்கள். J.E.&A.E.E CIVIl அவர்களும் தங்களது வக்கீல் இந்நும் ஒப்பீனியன் ஏதும் தரவில்லையாதலால் எதுவும் செய்ய இயலது என்றும் வேண்டுமென்றே காலத்தை கட்த்தி, குற்றவாளிகளுக்கு உடந்தையாக சுய லாப நோக்கோடு செயல்பட்டு வருகின்றார்கள்.
காவல் ஆய்வாள்ர் ஸ்ரீரங்கம் அவர்களிடம் 21-07-2010. அன்று புகார் அளித்த்திற்கு வாங்க மறுத்த்தின் மேற்கொண்டு காவல்துறை ஆணையர், திருச்சி, அவர்களிடம் 22-07-2010 அன்று, நேரிடையாக அளிக்கப்பட்டதுடன், காவல் ஆய்வாளருக்கு பதிவு தபாலில், புகார் அனுப்பப்பட்டது. இன்று வரை எந்தவிசாரணையும் இல்லை.
எனவே,
1. உதவி பத்திரபதிவு அலுவலர் ஸ்ரீரங்கம் மீதும், J.E. CIVIL A.E.E.CIVIL ஸ்ரீரங்கம் ஆகியோர்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுகவேண்டுமாய் பணிவோடு கேட்டுக்கொள்கின்றேன்.
2. அத்துடன் திரு.வேணுகோபால் மற்றும் திரு ஜெகநாத அய்யங்கார் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உத்திரவு இடவேண்டுமாயும் கேட்டுக்கொள்கின்றேன்.
3. காவல் நிலையத்தில் எங்கள் புகார்கள் அனைத்தின் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க உத்திரவு இடவேண்டுமாயும் கேட்டுக்கொள்கின்றென்.
இப்படிக்கு
திருச்சி-5 ம.செகநாதன்.பி.ஈ.
26.-07-2010 தலைவர்,
தாத்தச்சாரியார் ஆர்கேட் ஓன்ர்ஸ் அஸோஸியேஸன்,
எண்.6,இரண்டாவது மாடி,ஆண்டாள் பிளாக்,
தாத்தாச்சாரியார் கார்டன்,
மாம்பலச்சாலை,திருச்சி-5