Monday, 30 May 2011

ஸ்ரீரங்கம் நகராட்சி நிர்வாகமும்—அனுமதியற்ற மனைகள் போடப்பட்டு நகராட்சி பகுதியில் விற்கப்பட்டது. இழப்பீடு நகராட்சி நிர்வாகத்திற்கு----


ஸ்ரீரங்கம் நகராட்சி நிர்வாகமும்—அனுமதியற்ற மனைகள் போடப்பட்டு நகராட்சி பகுதியில் விற்கப்பட்டது. இழப்பீடு நகராட்சி நிர்வாகத்திற்கு----

   ஜெகநாத அய்யங்கார் அவர்கள் T.S.2327/A1 TO A10- திம்மராய சமுத்திரம் கிராமம்-வார்டு 3-பிளாக் எண். 44, ஸ்ரீரங்கம் கோட்டம் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட நிலத்தில் 5ஏகர் 25 செண்ட் நிலதில் G.O..125 dated 27MARCH 1996  AS AMENDED VIDE THEIR LETTER DATED 23 APRIL 1996. அனுமதி பெற்று 16 அடுக்கு மாடி கட்டிடங்கள் கடந்த 1996 –ல் கட்ட ஆரம்பித்து 15 கட்டிடங்கள் கட்டி முடித்துள்ளார்கல். அனுமதி காலாவதி ஆனபிறகும் சட்ட திட்டங்களை மதிக்காமல் திருட்டுத்தனமாக 5 அடுக்கு மாடி கட்டிடங்கள் கட்டிவிட்டு கடைசியாக தற்பொழுது ஏ-4 கட்டிட்த்தை நிர்வாகம் தடை செய்தும் நிருத்தாமல் கட்டுவதை தொடர்ந்துள்ளார்கள். அவ்வப்பொழுது நகராட்சி நிர்வாகம் தடை செய்வதாக நோட்டீஸ் கொடுத்து விட்டு தூங்குவதையே வேலையாக தொடர்ந்து வருகின்றது.
   இந்நிலையில் திரு.ஜெகநாத அய்ய்ங்கார் அவர்கள் பல முறையற்ற வழிய்ய் கடைபிடித்து ந.க.எண். 2327/ஏ4 பகுதி வார்டு சி, பிளாக் 44-ல் அனுமதியர்ர மனைகள் போட்டு விற்பனை செய்துள்ளார்கள். ஏன்? இந்த தாத்தாச்சாரியார் கார்டன் அனுமதியானது ஒரு தனியார் காலனி. இந்த பகுதி முற்றிலும் தனியார்காலனியின் காரணமாக அதில் உள்ள சாலை அனைத்தும் தனியார் சாலையாகும் .அனுமதியில் இவை தெளிவாக உள்ளது. இந்நிலையில் தாயார் கட்டிட்த்திற்கும் டால்மியா கட்டிட்த்திற்கும் இடை பட்ட இடம் பாதையில்லா நிலையில் அதை பொதுபாதை என்று உள்மனைகளுக்கு எழுதி கொடுத்துள்ளார்கள். நகராட்சி நிர்வாகத்திடம் இது தனியார்காலனி என்பதால் முறையான அனுமதி பெறமுடியவில்லை. எனவேதான் இந்த தில்லுமுல்லு.
   உள்ளே மனை போடுவதற்குமுன்பு இமாம் பசந்து மாமரங்களும், தென்னைமரங்களும் வெட்டப்படும் பொழுதே நகராட்சி நிர்வாகத்திற்கும் மற்றும் செகரட்டரி முனிசிபல் அட்மினிஸ்ட்ரேன் அவர்களுக்கும் தெளிவாக எழுத்துமூலமாக தெளிவாக்கப்பட்ட பொழுதும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 சாலை அமைப்பதற்குமுன்பு இடைப்பட்ட பகுதியில் இருந்த நுனா மரத்தை வெட்டப்பட்டது பற்றியும், கெட்டவார்த்தை சொல்லி திட்டியது பற்றியும், அடிக்கவந்த்தையும் தெளிவாக எழுதி புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் புகார் இந்தும் விசாரனையில்   மேலும் பலமுறை அத்துமேரல்கள் பற்றியும் நகராட்சி நிர்வாகத்திற்கு தெளிவாக எழுத்துமூலமாக தெறிவிக்கப்பட்டுள்ளது.
  இந்நிலையில் எந்த சட்ட திட்டங்களுக்கும் கட்டுபடாமல் அத்துமீரல் செயல்களை தொடர்ந்து செயல்பட்டு வர்கின்றார்கள். இந்த நகராட்சி நிர்வாகமும் பெயருக்கு செயல்படுவதாக நாடகமாடி வருகின்றார்கள்.
  நகராட்சி நிர்வாகம் செயல்படுவது எல்லாம் ஸ்ரீ ரங்கநாதருக்கே வெளிச்சம். இதில் டெவெலப்மெண்ட் சார்ச்சும் மற்றும் கட்டணங்களும் நகராட்சி நிர்வாகத்திற்கு இழப்பீடுதான்.உள்ளது.

Saturday, 28 May 2011

ஸ்ரீரங்கம் நகராட்சியும் நிதி இழப்பீடும்- திருந்துமா இந்த ஸ்ரீரங்கம் நகராட்சி—


ஸ்ரீரங்கம் நகராட்சியும் நிதி இழப்பீடும்- திருந்துமா இந்த ஸ்ரீரங்கம் நகராட்சி—

   ஸ்ரீ ராணா பன்மாடக்குடில் கட்டிட்த்தில் மொத்தம் 24 குடியிருப்புகள் உள்ளது. இந்த கட்டிடம் 2000-ஆம் ஆண்டே கட்டி முடிக்கப்பட்டது. இது நாள் வரை சுமார் 16 அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு வரி விதிக்கப்படவில்லை. இந்த இழப்பீடு பற்றி நகராட்சி நிர்வாகம் எந்த கவலையும் படவில்லை.

   வரி இழப்பீடு பற்றி எழுத்து மூலமாக கேட்டால், முன் தேதியிட்டு வசூலிக்கப்படுவதால் எந்த இழப்பீடும் இல்லை என்று தெரிவித்து பதில் தருகின்றார்கள். ஆனால் 2000- ஆண்டு கட்டப்பட்ட கட்டிடத்திற்கு இது நாள் வரை வரி விதிக்கபடாமல் இருந்துவிட்டு தற்பொழுது வரி விதிக்கவேண்டி 2011-ல்  கேட்ட திரு.எஸ்.வி.துரை மற்றும் காயத்திரி அவர்களிண் வீட்டிற்கு 2005-லிருந்து வரி விதித்துள்ளார்கள்.

   எதை எதிர்ப்பார்த்து இவ்வாறு நகராட்சி உழியர்கள் நடந்து கொள்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது. இந்நும் 16 வீடுகளுக்கு 2000 ஆண்டிலிருந்து வரி விதிக்கபடுதல் உள்ள நிலையில் இவர்களின் நடவடிக்கையய் என்ன வென்று சொல்வது. வரி இழப்பீடு இல்லை என்று சொல்வதை யார் ஏற்றுக்கொள்வார்கள்.

   இந்த ஒரு கட்டிடத்தில் மட்டும் கடந்த 11 வருடத்திற்கு வரி இழப்பீடு தொகை ஆனது ரூ 2,20,000/= க்கு மேல் என்பது தெளிவு.

   இவர்கள் திருந்த மாட்டார்கள். இழப்பீடு ஏற்பட்டுகொண்டே தான் இருக்கும்.






Friday, 13 May 2011

ஸ்ரீரங்கம் நகராட்சியும் ஸ்ரீமான் திரு ஜெகநாத அய்யங்காரும் செய்த செய்கின்ற அடாத செயல்கள்—சட்டம் விதிகள் எங்கும் இல்லை. சட்டமாவது --- மண்ணாவது---.நான்கு---


ஸ்ரீரங்கம் நகராட்சியும் ஸ்ரீமான் திரு ஜெகநாத அய்யங்காரும் செய்த செய்கின்ற அடாத செயல்கள்—சட்டம் விதிகள் எங்கும் இல்லை. சட்டமாவது --- மண்ணாவது---.நான்கு---

ஸ்ரீரங்கநாதா கண்திரவாய் !   ஸ்ரீரங்கநாதா கண்திரவாய் !  ஸ்ரீரங்கநாதா கண்திரவாய் !

G.O. (D) NO. 125. Dt. 27.3.96 ன் படி சர்வே எண் TS No. 2327/a1 to a10 வார்டு எண் 3 பிளாக் 44 ஸ்ரீரங்கம் கோட்டம் 16 பன்மாடக்குடில்கள் G+3 கட்டுவதற்க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதியின் பேரில் கட்டிடங்களோ இடமாறிகட்டப்பட்ட்து அல்லாமல் 30 அடி சாலை அமையவேண்டிய எட்த்தில் 23 அடி தான் விடப்பட்டு மற்றவைய்ய்ய் காசாக்கப்பட்டுவிட்ட்து. இந்த 23 அடி தெருவய்யும் தற்பொழுது எங்கள் போராட்ட்த்திற்கு பிறகு 11 அடி சாலைய்ய் ,மட்டும் அனைத்து முழுமைபெறாமல் அப்படியே பொட்டுவிட்டார்கள். நகராட்சி நிர்வாகம் நன்றாக தூங்குகின்றது..

திட்ட அனுமதி பெற்றவரு செய்யாமல்  c2 குமரன் பிளாக், c3 னியு ராகவேந்திரா , c4  நியு விநாயகா ஆகீய கட்டிடங்களை சுமார் 120 அடிக்கு மேல் வடபுரம் தள்ளி கட்டப்பட்டு இந்த இடத்தில்  9887 ச. அடி. விற்கப்பட்டது. மேலும் எஸ்ஸார் கட்டிட்த்தில் சுமார்  நான்கில் மூன்று பகுதொஇய்யும் விற்றுள்ளார்கள். இந்த தகவல் நகராட்சி நிர்வாகம் உயர் நீதிமன்ற தீர்ப்பின் பேரில் அளந்த பொழுது தெளிவாகிஉள்ளது. இது பற்றி நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த செயல்பாடு ஆனது ஜெகநாத அய்யங்கார் அவர்களின் நலன் கருதி செயல்பாடு நிலையில் உள்ளது.

மேலும் நில உறிமையாளரின் சொந்த உபயோகம் என்று விடப்பட்ட பகுதியான சுமார் 1.5 ஏக்கர் நிலத்தினை வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்துள்ளார்கள். இந்த வீட்டுமனை பிரிவுகளுக்கென எந்தபொது உபயோக இடமும் விடப்படவில்லை. அத்துடன் எங்கள் சங்கத்திற்கே மட்டும் உறிமையான தனியார் சாலையய் இந்த வீட்டுமனைகளுக்கு சாலையாக அனுமதி அளித்துள்ளார்கள் இந்த நகராட்சி நிர்வாகம். யாருடைய நலன் கருதி யார் இதற்கு உடந்தை கவணியுங்கள்..

எல்லாம் அந்த ரெங்கநாதர் தான் கவனித்து நல்ல புத்தியய் கொடுக்கவேண்டும்.





Sunday, 8 May 2011

ஸ்ரீரங்கம் நகாரட்சியும் ஸ்ரீமான் ஜெகநாத அய்யங்காரும்.


எங்கள் போராட்டத்தின் கண் ஒரு கடிதமும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டாமல் உள்ளதின் கண் அந்த கடித்தையே இங்கு  அனைவருக்கும்  தெளிவடையும் பொருட்டு அளிக்கப்படுகின்றது.

.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           Regd.no.236/2007
            THATHACHARIOR ARCADE OWNERS’ ASSOCIATION
                                                  S-4, Sri Bajaj Block, Thathacharior Garden
                                                              Mambala Salai, Trichy-620005
              President: M.Jaganathan         Secretary: R.Ilangovan           Treasurer: R.Manivannan
T A O A/PRES/D505/2010/DATED 09-08-2010

   அனுப்புதல்  : -  .செகநாதன்.பி..
                    தலைவர்,
                    தாத்தச்சாரியார் ஆர்கேட் ஓன்ர்ஸ் அஸோஸியேஸன்,
                   எண்.6,இரண்டாவது மாடி,ஆண்டாள் பிளாக்,
                   தாத்தாச்சாரியார் கார்டன்,மாம்பலச்சாலை,திருச்சி-5

   பெருநர்    :-   The Commissioner,
                      Municipal administration,
                      Ezhilagam annexure building,
                      VI  floor,Chepauk,
                      Chennai-600005.
ஐயா,
    
    பொருள்:-திருச்சிராப்பள்ளி மாநகராட்சி,  ஸ்ரீரங்கம் கோட்டம், தாத்தாச்சாரியார் கார்டன் அனுமதியற்ற மனைப்பிரிவுகள்-அத்துமீரல்கள்-அரசு உத்திரவு கீழ்படியாமை-நீதிமன்ற அவமதிப்பு-நடவடிக்கை சம்பந்தமாக:-
    பார்வை:-
1.     T.S.2327/A1 TO A10- திம்மராய சமுத்திரம் கிராமம்-வார்டு 3-பிளாக் எண். 44, ஸ்ரீரங்கம் கோட்டம் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி.
2.     .நீதிமன்ற் வழக்கு jmc iii வழக்கு  எண்.  46/2010.
3.     எங்கள் சங்க தகவல் எண் 9/10-06-2010.
4.     புகார் கடிதங்கள்  07-07-2010 மற்றும் 02-08-2010.
5.     காவல்துறை ஆய்வாளர் திருச்சிராப்பள்ளி 21-07-2010 தேதியிட்ட புகார் கடிதம்.
6.     உதவி ஆணையர்-ஸ்ரீரங்கம் கோட்டம் அவர்களுக்கு 15-07-2010.-ல் அனுப்பிய தந்தி தந்தி
7.     14-07-2010 தேதியில் போனோகிராம் –துனை சார்பதிவாளர் ஸ்ரீரங்கம் அவர்களுக்கு.
8.     G.O..125 dated 27MARCH 1996  AS AMENDED VIDE THEIR LETTER DATED 23 APRIL 1996.

தாத்தாச்சாரியார் ஆர்கேட் ஓன்ர்ஸ் ஆஸோஸியேசன் சமர்ப்பிக்கும் மனு,
                            
   எங்கள் அர்கேட்  G.O..125 dated 27MARCH 1996  AS AMENDED VIDE THEIR LETTER DATED 23 APRIL 1996 மூலம் திரு ஜெகனாத அய்யங்கார் அவர்கள்  லே-அவுட் அனுமதிபெற்று, ஒரு தனியார் காலனியாக அமைக்கப்பட்டது.  திட்டத்தின்படி எந்த பொது வசதிகளும் கடந்த 13 வருடங்களாக செய்துதரப்படவில்லை. இதன் காரணமாக சங்கம் அமைத்து பொது வசதிகளுக்காக எங்கள் முழு உழைப்பையும் ஈடுபாட்டுடன் செய்து வருகின்றோம். எங்கள் நியாயமான நூற்றுக்கணக்கான வேண்டுதல்கள் அனைத்தும் இந்த திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நிர்வாகத்தில் செல்லாதவைகளாகிவிட்டன.
எனவே உயர்நீதி மன்றத்தை நாடி உத்திரவு பெற்றும், நகராட்சி நிர்வாகம் எங்களை முழுமையாக நிராகரித்துவிட்டதினால், தற்பொழுது மறுபடியும் உயர்நீதி மன்றத்தை நாடவைத்துள்ளார்கள்.
     இந்நிலையில் எங்கள் தனியார் காலனியில் உள்ள தனியார் சாலையை ஆக்கிரமித்து திரு ஜெகனாத அய்யங்கார்  அவர்கள், ஏஜண்டுகள் மூலம் தில்லுமுல்லு, செய்துமுறையான அனுமதி பெறாமல், நகராட்சி எல்லைக்குள் உள்ள T.S.2327/A1 TO A10-  பகுதியில் மனைபிரிவுகள் அமைத்து விற்பனையை தொடங்கினார்கள். இந்த எங்கள் தனியார் சாலை ஆக்கிரமிப்பையும், சாலை ஓர மரங்களை வெட்டியும், சேதப்படுத்தியும் செய்யப்பட்டது, சம்பந்தமாக 4 புகார்கள் {1. 1994790 தேதி 19-07-2009, 2. 1829220 தேதி 15-011-2009, 3. 31-01-2010 தேதியிட்ட புகார், மற்றும்  4. 21-07-2010 தேதியிட்ட புகார்}  ஆகியவைகளை காவல் நிலையித்தில் சமர்ப்பித்தும், நாங்கள் அலைந்த்துதான் மிச்சம். எந்த விசாரனையும் நடைபெறாமலே கட்டிவைத்து விட்டார்கள்.  எங்கள் பொதுநல நோக்கு செயல்கள் அனைத்தும் விரயமாகிவிட்டது  மட்டுமல்லாமல், வேண்டாத விழமிகளால் நாங்கள் அவமான்ப்படுத்தப்பட்டோம்.  பாதை ஆக்கிரமிப்பு, திட்டல், அடிக்கவந்தது அனைத்தையும் விழமிகளிடம் மூத்த குடிமகன்களாகிய நாங்கள் பொருத்துகொண்டு அவமானப்பட வேண்டியாதாகி விட்டது..
     இந்நிலையில் உள்ளூர் திட்டகுழுமம்  உத்திரவின் பேரில் நகராட்சி
நிர்வாகம் F1/10902/09  நாள் 27-11-2009-ல், விளை நிலத்தை முன்பிருந்த நிலைக்கே கொண்டு வரவேண்டும் என்றும், மற்றும் உடனடியாக முறையான அனுமதி பெறவேண்டும் என்றும் உத்திரவு இட்டு மாநகராட்சி சட்டத்தின் படி நடவடிக்கை எடுப்பதாக திரு ஜெகனாத அய்யங்கார் மற்றும் திரு விசுவநாத் ரெட்டியார் ஆகியவர்களுக்கு அறிவிப்பு அளித்ததின் பேரில் J M C III  நீதி மன்றத்தில் 46/2010 {22-01-2010}-ல் வழக்கு தொடர்ந்து ரூபாய் 1000/= தலா தண்டம் செலுத்த நீதி மன்றத்தில் உத்திரவிடட்தின் பேரில் தண்டம் செலுத்தியுள்ளார்கள். தொடர்ந்து அவர்கள் நீதிமனற உத்திரவை மீறி செயல்பட்டதினால் தொடர் நடவடிக்கை எடுத்து நீதி மன்ற வழக்கு 15-04-2010-ல் தாக்கல் செய்துள்ளார்கள்.
       இந்நிலையில் எந்த சட்டரீதியான உத்திரவையும் மதிக்காமல் மீண்டும் மனைகள் விற்பனை செய்வதுடன், சாலை அமைப்பதை தீவிரமாக  நிருத்தாமல் செயல்பட்டார்கள்.
       உதவி இயக்குநர் அவர்களும்  25-01-2010 தேதி  உத்திரவில்  உதவி பத்திர பதிவு அதிகாரி அவர்களுக்கு இந்த T.S.2327/A4  பகுதியில் அனுமதியற்ற மனைகளை பதிவு செய்ய  வேண்டாம் என்று தெரிவித்து எழுதியுள்ளார்கள்.    J M C III  நீதி மன்றத்தில் 46/2010 -ல் வழக்கு நிலுவையில் உள்ளது. தெரிந்தும் பத்திர பதிவு அதிகாரி சட்ட உத்திரவிற்கு புரம்பாக சுய லாபத்தின் நோக்கில் மனைகளை பத்திர பதிவு செய்துள்ளார்கள். மேலும் 14-07-2010 அன்று நான் தொலை பேசியில் பத்திர பதிவு அலுவலர் அவர்களிடம், உதவி இயக்குநர் அவர்களின் உத்திரவை எடுத்து சொல்லியும் மேலும், போனோகிராம் ஒன்று  கிழ்கண்டவாறு,
 TO:-    THE SUB REGISTRAR.   PH:2431544.         STOP REGISTRATION OF PLOTS IN  T.S.NO..2327/A1 PART, SINCE COURT CASE OF CONTINUANCE AFFENCE PENDING AT J M C III, VIDE. PR.NO.46/2010 JE DN  AND AS  PER DIRECTION OF LPA/ந.க.எண். 1618/09 தி.2.திரு-2 நாள் 25-01-2010”  பத்திரபதிவு அதிகாரிக்கு at 3.20.pm on 14-07-2010  கொடுத்தும்,  சட்டத்திர்கு புறம்பாக, மேற்கொண்டு, 14-07-2010 அன்று மேற்படி சர்வே எண்ணில் 5 மனைகள் பத்திரபதிவு செய்துள்ளார்கள். அவகளாவன , பதிவு எண்கள்.  1844,1845,1846,1847,1848 அகும்.
       இந்நிலையில் JE/civil/srirangam zone Thiru. LAKSHMANAMOORTHY -க்கும்   ASSISTANT COMMISSIONER SRIRANGAM ZONE – அவர்களுக்கும் 14-07-2010 மதியம் 12.12 -க்கு sms  செய்தி அனுப்பினேன்.
violating your order and court orders,  J.BHARATH  IS DEVOLOPING CARRYING OUT WORKS  IN T.S.NO.2327/A4 PART THIMMARAYASAMUTHTHIRAM,TODAY.”
          மேலும்  தொலைபேசியில் டிப்பர் மற்றும் பொக்கலைன் வேலை செய்து கொண்டிருப்பதையும் தெரிவித்தேன். நேரிலும் சென்று  JE/civil/ srirangam அவர்களிடம் தெரிவித்தற்கு “என்னால் எதுவும் செய்யமுடியாது”  என்றும்,  கடந்த  மூன்று அண்டுகளாக நீங்க அனுப்பிய கடிதங்கள் அனைத்தையும் கட்டி வைத்துள்ளேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. E.B. யில்  காசு வாங்காம எதுவும் செய்வதில்லை. உங்களுக்கு தெரியாதா?.”  என்றும்,  தெரிவித்து தன் பணியை முழுமையாக தவிர்த்து, குற்றவாளிகளுக்கு சுய லாப நோக்கத்தோடு உடந்தையாக செயல்பட்டுள்ளார்கள். அதன் பிறகு என் அலை பேசி அழைப்பையும் ஏற்பதில்லை.
      அதை தொடர்ந்து தந்தி 15-07-2010 கலை 11.-38 மணிக்கு அனுப்ப்பட்ட்து. தந்தி நகல்:- TO. 
THE ASSISTANT COMMISSIONER, SRIRANGAM ZONE, TRICHIRAPALLI CORPORATION.
SIR,
TODAY, 15-07-2010 THIRU.VENUGOPAL IS CARRYING OUT THE STREET FORMATION WORKS DESPITE YOUR ORDERS AND THE COURT CASE AT JMC III NO.46/10 IN T.S.NO.2327/A4 PART J.BHARAT LAND. REQUEST TO TAKE ACTION AND ALSO SEIGE THE VEHICLE --      SD.                                                                                                                                 
                                                                                                  JAGANATHAN.
                                                                     THATHACHIYAR ARCADE OWNERS ASSOCIATION,
                                                                                 MAMBALACHALAI, TRICHY.-
Copy to 1. THE COMMISSIONER, TRICHIRAPALLI CORPORATION.
               2. THE JE CIVIL, SRIRANGAM ZONE, TRICHIRAPALLI CORPORATION.
              3. THE ASSISTANT DIRECTOR, LOCAL PLANING AUTHORITY,     TRICHIRAPPALLI.   NO.10.   WILLIAMS ROAD,  CONTONEMENT.
          உதவி செயற்  பொறியாளர்/பொது ஸ்ரீரங்கம் கோட்டம் அவர்கஐ சந்தித்து நேரில் பேசியபொழுது அவர்களும் நான் ஈ.பி –யில் ஒரு கம்பத்தை நகர்த்தி நட்டு மூன்று பேஸ் சப்பளை பெறுவதர்க்கு ரூபாய். 15,000/= {பதிணைந்தாறாயிரம்} லஞ்சம் கொடுத்துதான் பெற்றேன்”.  என்று தெரிவித்து பார்க்கலாம்என்று கூறி தங்களுக்கே உறிய பாணியில் அனைத்து குற்றவாளிகளுக்கும் உடந்தையாக செயல்பட்டுள்ளார்கள்.
           திரு.வேணுகோபால் மற்றும் ஜெகநாத அய்யங்கார் அவர்களும் அணைத்து வேலைகளையும் நீதிமன்ற் வழக்கிற்கு விரோதமாகவும், அனைத்து நியாயமான அரசு உத்திரவிற்கும் கீழ்படியாமல், உதாசீனப்படுத்தி, டிப்பர் மூலம் மண் அடித்தும், பொக்கலின் மூலம் நிரவியும், செய்தார்கள்.  J.E.&A.E.E CIVIl அவர்களும்  தங்களது வக்கீல் இந்நும் ஒப்பீனியன் ஏதும் தரவில்லையாதலால் எதுவும் செய்ய இயலது என்றும் வேண்டுமென்றே காலத்தை கட்த்தி, குற்றவாளிகளுக்கு உடந்தையாக சுய லாப நோக்கோடு செயல்பட்டு வருகின்றார்கள்.
           காவல் ஆய்வாள்ர் ஸ்ரீரங்கம் அவர்களிடம்  21-07-2010. அன்று           புகார் அளித்த்திற்கு வாங்க மறுத்த்தின் மேற்கொண்டு காவல்துறை ஆணையர், திருச்சி, அவர்களிடம் 22-07-2010 அன்று, நேரிடையாக அளிக்கப்பட்டதுடன், காவல் ஆய்வாளருக்கு பதிவு தபாலில், புகார் அனுப்பப்பட்டது. இன்று வரை எந்தவிசாரணையும் இல்லை.
          எனவே,
1.        உதவி பத்திரபதிவு அலுவலர் ஸ்ரீரங்கம் மீதும், J.E. CIVIL A.E.E.CIVIL ஸ்ரீரங்கம் ஆகியோர்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுகவேண்டுமாய்  பணிவோடு கேட்டுக்கொள்கின்றேன்.                                 
2.        அத்துடன் திரு.வேணுகோபால் மற்றும் திரு ஜெகநாத அய்யங்கார் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உத்திரவு இடவேண்டுமாயும் கேட்டுக்கொள்கின்றேன்.

3.        காவல் நிலையத்தில் எங்கள் புகார்கள் அனைத்தின் மீதும் உடனடி                  நடவடிக்கை எடுக்க உத்திரவு இடவேண்டுமாயும் கேட்டுக்கொள்கின்றென்.
                                     இப்படிக்கு

   திருச்சி-5                   .செகநாதன்.பி..

    26.-07-2010                          தலைவர்,
                                தாத்தச்சாரியார் ஆர்கேட் ஓன்ர்ஸ் அஸோஸியேஸன்,
                                    எண்.6,இரண்டாவது மாடி,ஆண்டாள் பிளாக்,
                                    தாத்தாச்சாரியார் கார்டன்,
                                            மாம்பலச்சாலை,திருச்சி-5

ஸ்ரீரங்கம் நகராட்சி நிர்வாகம், நடக்கின்றதா? நகருகின்றதா? உறங்குகின்றதா? இல்லை! இல்லை ! பின், உதவிகரமாக இருக்கின்றது. யாருக்கு ஸ்ரீமான் ஜெகநாத அய்யங்கார் அவர்களுக்கு. சுயலாபத்திற்காகதானா?


ஸ்ரீரங்கம் நகராட்சி நிர்வாகம், நடக்கின்றதா? நகருகின்றதா? உறங்குகின்றதா? இல்லை! இல்லை ! பின், உதவிகரமாக இருக்கின்றது. யாருக்கு ஸ்ரீமான் ஜெகநாத அய்யங்கார் அவர்களுக்கு. சுயலாபத்திற்காகதானா?
G.O. (D) NO. 125. Dt. 27.3.96 ன் படி சர்வே எண் TS No. 2327/a1 to a10 வார்டு எண் 3 பிளாக் 44 ஸ்ரீரங்கம் கோட்டம் 16 பன்மாடக்குடில்கள் G+3 கட்டுவதற்க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கீழ்கண்ட நிபந்தனைகளுடன்,
1.மனுதார்ர் தனது சொந்த செலவில் குடிநீர் வசதிகளை செய்து தரப்படல் வேண்டும்.
2.பொது உபயோகத்திற்காக 10 விழுக்காடுகள் திறவிட்த்திற்காக விடப்பட வேண்டும்.
3.மனைப்பிரிவுகளில் சாலைகள் அமைக்கப்படவேண்டும்.
4.மனைப்பிரிவு சாலைகள்மற்றும் பொது உபயோக ஒதுக்கீடுகள் பார்வையில் ப்சுட்டிகாட்டியவாறு பராமரிக்கப்படவேண்டும்.
5.பொது சாலைகள் சிமெண்ட் கான்கிரீட் சாலைக்கள் அமைத்து தரப்படல் வேண்டும்.
இந்த வசதிகள் எதையும் செய்யாமல் கடந்த 16 வருடங்களாக பன்மாடக்குடில்களை மட்டும் கட்டி விற்று வந்த்தார்கள். அனுமத்ய் காலமாச்ன 6 வருடங்கள் வரை நீட்டிப்பு செது விட்டு மேற்கொண்டு நீட்டிக்க வழியில்லத நிலையில் அனுமத்ய் இல்லாமலே நகராட்சி நிர்வாகௌஉழியர்கள் துணையுடன்.
12-01 2006 தேதியிட்ட வழக்கறிஞரின்மூலம் அணைத்து வசதிகள் செய்யப்படவில்லை என்றகாரணத்திற்காகஒரு நோட்டீஸ் அனுப்ப்ப்பட்ட்து. அதற்கு பதிலாக சங்கம் வீட்டு உறிமையாளர்கலால் அமைத்துகொள்ள வேண்டும் என்றும், தனக்கும் இந்த பன்மாடக்குடில் அமைப்பிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும், எந்தவிதமான கடிதபோக்குவரத்தும் தன்னிடம் வைத்து கொள்ளக்கூடாது என்றும் வழக்கறிஞர் மூலம் அளித்தாரகள்.
28-03-2008-ல்வழக்கறிஞர் மூலம்சங்கம் ஒரு நோட்டீஸ் திரு ஜெகநாத அய்யங்கார் அவர்களுக்கு அனுப்பியது. அதில் அரசு உத்திரவின் படி வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என்பதயும் 10 விழுக்காடு பொது இடம் அளிக்கப்படவில்லை என்றும், ஜெகநாத அய்யங்கார் அவர்களின் விளக்கம் எந்த சூழ்நிலையிலும் சர்யானத அல்ல என்றும் ,முற்றிலும் பித்தலாட்டமாக பதில் உள்ளதாகவும் தெரிவித்து எழுதப்பட்ட்து.அதற்கும் முன்பு கூறியபடியே பதி இருந்த்து.
இந்த நிலையில் பல 100-க்கணக்கில் கடிதம் நகராட்சி நிர்வாகத்திற்கு எழுதப்பட்டது. கண்துடைப்பு நாடகம் நடத்துவதையே தன் வழியாக கொண்டு பேருக்கு கடிதம் எழுதுவதை மட்டும் செய்து வந்தார்கள்.
வேறு வழியில்லாத நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தில்  DIRECTOR OF TOWN AND COUNTRY PLANING , THE DISTRICT COLLECTOR TIRUCHIRAAPALLI,THE COMMISSIONER TRICHIRAAPALLI CORPORATION ஆகியோர்கள் மீது வழக்கு, தாதாசாரியார் ஆர்க்கேட் உறிமையாளர் சங்கம்  W.PNO. 6840 OF 2008  என்ற எண்ணில் வழக்கு தொடர்ந்த்து. அதன் தீர்ப்பானது  மூன்று மாதங்களுக்குள் நகராட்சி நிர்வாகமும் நகர் ஊரமைப்பு அதிகாரிகளும் சேர்ந்து இந்த தாத்தாசாரியார் ஆர்கேட் வளாகத்தில் திட்டம் செயல்பட்ட்தை ஆய்ந்து முறயான சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அறிகையய் குறிப்பிட்ட காலத்திற்குள் சங்கத்திற்கு அளிக்கவேண்டும் என்று உத்திரவு இடப்பட்ட்து.
இந்த நிலையில் மூன்று மாத கடசியில் நகராட்சி நிர்வாகம் எங்கள் இடத்தை பார்வையிட்டு அளந்து சரிபார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எந்த எல்லை கல்லையும் பார்க்காமலே தவறான கணக்கீடு செய்து அறிகை தயார் செய்யும் பொழுதே ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல என்பதை தெளிவு படுத்தி கடிதம் அளித்து சங்கம். இந்த கடிதமும் எப்பொழுதும் போலவே இந்த எங்களது வேண்டுகோளும் குப்பையில் போடப்பட்டது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த முறையில்லா நடவடிக்கைக்கு காரணமானவர்கள் திரு லக்ஷ்மனமூர்த்தி உதவி பொறியாளர் ஸ்ரீரங்கம் நகராட்சி மற்றும் திரு சிவபாதம் உதவி பொறியாளர் திருச்சிராப்பள்ளி நகராட்சி ஆகியோர்களேதான்.
இதன் மேற்கொண்டு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மீண்டும் சங்கம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, ஆணயைர் திருச்சிராப்பள்ளி நகராட்சி நிர்வாகம், மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியாளர் ஆகியோர்மீது தற்பொழுது போடப்பட்டுள்ளது. நிலுவயில் உள்ளது.
இந்நிலையிலும் இன்று வரை நகராட்சி நிர்வாகம் கண்தொடைப்பு நாடகத்தயே காட்டுகின்றது.


Friday, 6 May 2011

ஸ்ரீரங்கம் நகராட்சி நிர்வாகமும்—அனுமதியற்ற கட்டிடங்களும்—


ஸ்ரீரங்கம் நகராட்சி, தாத்தாச்சாரியார் கார்டன், ம்ம்பலச்சாலையில் ஜெகநாத அய்யங்கார் அவர்கள் 16 பன்மாடக்குடில்கள் கட்ட அனுமதி பெற்று கட்டிடங்கள் கட்டிமுடிக்கமுடியாத நிலையில் அனுமதி 6 வருடங்களில் காலாவதி 2002-லியே ஆகிவிட்ட நிலையில் அனுமதி யில்லாமலே, ரங்கா, பாலாஜி, அம்மன், அகிலாண்டேஸ்வரி, குமரன் ஆகிய கட்டிடங்களை கட்டியுள்ளார்கள். 2004-க்கு பிறகு இந்த கட்டிடங்களை கட்டியவர் வாஸ் கட்டுமானதார்ர் திரு சீனிவாஸன் அவர்கள். இந்த கட்டிடங்கள் அனைத்திலும் (அகிலாண்டேஸ்வரி தவிர) 5-வது மாடியாக பெண்ட் ஹ்வுஸ் கட்டி தங்கள் பொருப்பிலேயே வைத்துள்ளார்கள். அரசு சட்டதிட்டங்களுக்கு புரம்பாக.

இந்நிலையில் 16-வது கட்டிடமாக A-4 கட்டிடம் அனுமதியில்லாமலே 2009-ல் கட்டினார்கள். எங்கள் சங்கத்தின் மூலம் DIRECTOR OF TOWN AND COUNTRY PLANNIN-NG CHENNAI, THE COMMISSIONER MUNICIPAL ADMINISTRATION & WATER SUPLY CHENNAI,THE DISTRICT COLLECTOR TRICHRALLI,  ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்ட்தின் பேரில் தடைசெய்யப்பட்டது.
இந்த கட்டிடம் பொது இட்த்தை அக்கிரமிப்புசெய்து கட்டப்பட்டுள்ளது என்பதை மிக தெளிவாக முன்பதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிட்த்தின் தென் புரம் பொது இடம் உள்ளது.இந்த பொது இட்த்தின் அளச்வானது 80 அடிக்கு 56 அடி யாகும் .ஆனால் தற்பொழுது இருப்பதாவது  80 அடிக்கு 53.5 அடியாகும். இதிலும் அம்மன் பிளாக் வடபுரம் பார்வை வைத்து கட்டப்பட்டது. ஆனால் இக்கட்டிடம் தென் புரம் பார்வை வைத்து கட்டப்படவேண்டும் அனுமதியின் படி. இந்த சூழ்நிலையில் அந்த அம்மன் கட்டிட்த்திற்கு முன் முகுப்புபகுதியாக 20 அடி திட்ட அனுமதி படி விடப்பட வேண்டும். அந்த 20 அடியய்யும் விடப்பட்டால் பொது இடம் மேலும் குறைவு ஆகும். அதாவது பொது இடம் 80 அடிக்கு 37 அடி தான் உள்ளது. எனவே இந்த கட்டிடம் கட்டப்படுமானால் பொது உபயோகம் வெகுவாக குறைந்துவிடும் என்பது தெளிவு,ஏற்கனவே பொது இடம் சுமார் 15,000 ச.அடி விற்கப்பட்டுள்ள நிலையில் இந்த தகிடுத்த்தம் வேலைகளும் திரு ஜெகநாத அய்யங்கார் அவர்களால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த அளவீடுகள் உயர் நீதிமன்ற முறையீட்டு மூலம் இடப்பட்ட உத்திரவின் படி மாநகராட்சி அளந்து அளிக்கப்பட்ட அளவீடுகள் ஆகும்.
இந்த கட்டிட கட்டுமானதார்ர் சென்னை உயர் நீதி மன்றத்தில்  கட்டிடம் கட்ட அனுமதி கேட்டு முறையீடு செய்துள்ளார்கள். அந்த முறைய்யீட்டிற்கு ஆணையர் திருசிராபள்ளி நகராட்சி அவர்கள் பதில் உயர் நீதி மன்றத்தில் அனுமதி அளிக்க இயலாது என்று தெரிவித்து சமர்ப்பித்துள்ளார்கள்.
ஏமாற்றா, எந்தெந்த் வழிகளில் ஜெகநாத அய்யங்கார் முயர்ச்சிக்கின்றார் பார்த்தீர்களா!

ஆனால் தற்பொழுது இன்று 15-05-2011 தேதியில் அந்த A-4 கட்டிடம் அனுமதியில்லாமலே தொடர்ந்து கட்டப்பட்டுவருகின்றது. இவை யாருடைய தயவில் என்பது தெறியவில்லை. தற்பொழுது அனுமதி இல்லாத நிலையில் அந்த கட்டிடம் கட்டுவதை நகராட்சி நிர்வாகம் ஏன் பார்த்துகொண்டு இருக்கின்றது.? ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ?

Thursday, 5 May 2011

ஸ்ரீரங்கம் நகராட்சி நிர்வாகமும் ஸ்ரீமான் ஜெகனாத அய்யங்கார் அவர்களும் இணைந்து அரங்கேற்றும் நாடகம்—மயானசாலையில்---


ஸ்ரீரங்கம் நகராட்சி நிர்வாகமும் ஸ்ரீமான் ஜெகனாத அய்யங்கார் அவர்களும் இணைந்து அரங்கேற்றும் நாடகம்—மயானசாலையில்---


திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் கோட்டம், மாம்பழச்சாலை, திம்மராயசமுத்திரம் கிராமம் ,சர்வே ஏன்:2327/ஏ1 முதல் ஏ10 வரை அடங்கிய தாத்தாச்சாரியார் தோட்டத்தின் தெற்கு எல்லையாகச் செல்லும் மயான சாலையய்-     4 அடி அகலத்திற்கு 400 அடி நீளத்திற்கு ஆக்கிரமிப்பு செய்து-ஜெகநாத அய்யங்கார் அவர்கள் சொந்தமாக தென்னை மரங்கள் பயிரிட்டு வருகின்றார்கள் என்பதை தெளிவாக எழுதி தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மயான சாலை அகலம் குறுகி  பயன் பாட்டிற்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றது என்பதை கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.--அகற்றக்கோறிய நடவடிக்கைக்காக மனு-அளிக்கப்பட்டது. நகராட்சி நிர்வாகம் வேண்டுமென்றே தவறான தகவலை அளித்தது கண்டு மிகவும் வேதனை ஏற்படுத்தியது, அவர்கள் அளித்த பதிலில் மொத்தம் 0.2900 சதுரமீட்டர் பரப்பளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்கள்
           
   இந்த தகவலானது ஒரு முற்றும் படிக்காதவன் கூட அளிக்கமுடியாத ஒன்று ஆகும். எங்கல் கடிதத்திலேயே 400 அடி முழு நீளத்திற்கும் சுமார் 4 அடி அகலத்திற்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்திருந்தோம். இந்நிலையில் தற்பொழுது நீளம் மற்றும் அகலம் எதுவும் தெறிவிக்கப்படாமல் மொத்தம் 0.2900 சதுரமீட்டர் பரப்பளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்து எழுதி அளித்துள்ளார்கள். அதாவது சுமார் 3 ச.அடி. மொத்த நீளமான 400 அடிக்கும் சேர்த்து. இது சுமார் 1/10 “ தான் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அர்த்தம். என்னே விந்தையான கடிதம். படித்தவர்களால் எழுதப்பட்டது அல்ல. பொறுப்பற்றவர்கள் எழுதியுள்ளார்கள். வேலையில் கவனத்தை செலுத்தவில்லை.   மேலும் சரியான தகவlலை படத்துடன் அளிக்கவேண்டுமாயும், அத்துடன் காலம் தாழ்த்தாமல் ஆகிரமிப்பை அகற்ற வேண்டுமாயும் கேட்டுக்கொள்ளப்பட்ட்து. இது நாள் வரை நகராட்சி நிர்வாகம் இருக்கின்றதா என்று தெரியவில்லை..