Wednesday, 4 May 2011

ஸ்ரீரங்கம் நகராட்சியும் ஜெகநாத அய்யங்காரும் செய்த செய்கின்ற அடாத செயல்கள்—சட்டம் விதிகள் எங்கும் இல்லை .ஒன்று


ஸ்ரீரங்கம் நகராட்சியும் ஜெகநாத அய்யங்காரும் செய்த செய்கின்ற அடாத செயல்கள்—சட்டம் விதிகள் எங்கும் இல்லை .ஒன்று---


G.O. (D) NO. 125. Dt. 27.3.96 ன் படி சர்வே எண் TS No. 2327/a1 to a10 வார்டு எண் 3 பிளாக் 44 ஸ்ரீரங்கம் கோட்டம் 16 பன்மாடக்குடில்கள் G+3 கட்டுவதற்க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனுமதிபெற்றது  R. ஜெகநாத ஐயங்கார் அவர்கள்.
                    இங்கு R. ஜெகநாத ஐயங்கார் அவர்கள் அனைத்து பன்மாடக்குடில் குடியிருப்பு வாங்கியவர்களூக்கு உரிமையான பங்கீட்டை பதிவு செய்து தராமல் G+4 என்ற அனுமதியற்ற கணக்கீடு செய்து குறைந்த பங்குகளையே பதிவு செய்துள்ளார்கள்.
                   தவறான கணக்கீட்டின் படி திருட்டுத்தனமாக சட்டத்திற்க்கு புறம்பாக ஞாய தர்மங்கள் இல்லாமல்   95,840  பங்குகளை (அடிமனை அளவு 15000 சதுர அடி கட்டுமான ச்.அடி 53,496 ) கட்டுமான தாரருக்கு பகுதி பகுதியாக பிரித்து விற்றுள்ளார்கள். இந்த மாதிரியான விற்பனைகள் செல்லாது என்பதை உயர்நீதி மன்றத்தில் தீர்ப்பு அளீக்கப்பட்டுள்ளது என்பதின் விபரங்கள் அடங்கிய தகவல்கள் THE HINDU 30.8.2009 -ல் வெளியாகி உள்ளதின் நகல் நகராட்சி நிர்வாகத்திற்கு தெளிவாக எடுத்து கூறப்பட்டது.
                  இந்த உயர் நீதி மன்ற உத்தரவின் படி தவறான கணக்கீட்டு விற்ப்பனை செல்லாது என்பதும் அந்த பங்குகளை வீட்டின் உரிமையாளர்களுக்கே பகுத்து பதிவு செய்து தர உத்திரவு இட கேட்டு பலகாலம் ஆகியும் இது நாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை ஜெகநாத அய்யங்கார் அவர்களின் பனியாட்களா? இல்லை இல்லை நகராட்சி ஊழியர்கள் தான்.

No comments:

Post a Comment