Wednesday, 4 May 2011

ஸ்ரீரங்கம் நகராட்சியும் ஜெகநாத அய்யங்காரும் செய்த செய்கின்ற அடாத செயல்கள்—சட்டம் விதிகள் எங்கும் இல்லை சட்டமாவது --- மண்ணாவது---.மூன்று—


ஸ்ரீரங்கம் நகராட்சியும் ஜெகநாத அய்யங்காரும் செய்த செய்கின்ற அடாத செயல்கள்—சட்டம் விதிகள் எங்கும் இல்லை சட்டமாவது --- மண்ணாவது---.மூன்று—

G.O. (D) NO. 125. Dt. 27.3.96 ன் படி சர்வே எண் TS No. 2327/a1 to a10 வார்டு எண் 3 பிளாக் 44 ஸ்ரீரங்கம் கோட்டம் 16 பன்மாடக்குடில்கள் G+3 கட்டுவதற்க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனுமதிபெற்றது  R. ஜெகநாத ஐயங்கார் அவர்கள்  நியுவிநாயக, நியு ராகவேந்திரா, குமரன் ஆகிய மூன்று பன்மாடக்குடில் கட்டிடங்களை பொது இட்த்திற்கு சுமார் 120 அடி தள்ளி கட்டிவிட்டு பொது விடப்படவேண்டிய இடம் மாற்றி புதியதாக ஒரு இட்த்தை உருவாகி அந்த பொது இட்தை விற்றுவிட்டார்கள்.
ஒரு இடம் எஸ்ஸார் கட்டிடத்திற்கும் குமரன் கட்டிடத்திற்கும் இடைப்பட்ட இடம் 9887 ச.அடி.பத்திரபதிவு எண் 768/2009 நாள் 9-4-2009.கிறையம் செய்யப்பட்ட தொகை ரூபாய் 14,83,050/= மார்கெட் தொகையாக பதிவு செய்யப்பட்ட தொகை ரூபாய் 22,00,000/= ஆனால் அன்றைய மார்கெட் மதிப்பு ரூபாய் 1,80,00,000/=

இதன் தொடர்பாக 31-09-2009 அன்று மாவட்ட வரிவாய் அலுவலர், திருச்சிராபள்ளி நகராட்சி ஆணையர் அவர்கள். சென்னை டைரக்டர் ஆஃப் டவுன் அண்ட் கண்ட்ரி பிளானிங், டி.ஜி.பி டைரக்டர் ஆஃப் விஜிலன்ஸ் அண்ட் ஆண்டி கரப்சன் சென்னை, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியாளர், சீஃப் கமிஸனர் ஆஃப் இன்கம் டாக்ஸ் திருச்சி, ஆகியோர்களுக்கு தெளிவாக எழுதி அளிகப்பட்டது. சுமார் 1,80,00,000/= மதிப்பு உள்ள சொத்தினை அதுவும் ஜெகநாத அய்யங்கார் அவர்களுக்கு சொந்தம் இல்லாதநிலையில்  தவறாக விற்கப்பட்ட்துடன் கருப்பு பணம் கைமாறி இருப்பதற்கு இடம் இருந்த நிலையில் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்ட்து..

இது நாள்வரை பத்திரப்பதிவு ரத்து செய்யப்படவில்லை. வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டு அந்த பொது இட்த்தை இந்த குடியிருப்போர் சங்கத்திடம் ஒப்படைக்கவும் இல்லை. சட்டமா? மண்ணா? எது வெற்றி பெறும்-----

No comments:

Post a Comment