Wednesday, 4 May 2011

ஸ்ரீரங்கம் நகராட்சியும் ஜெகநாத அய்யங்காரும் செய்த செய்கின்ற அடாத செயல்கள்—சட்டம் விதிகள் எங்கும் இல்லை சட்டமாவது --- மண்ணாவது---.இரண்டு---


ஸ்ரீரங்கம் நகராட்சியும் ஜெகநாத அய்யங்காரும் செய்த செய்கின்ற அடாத செயல்கள்—சட்டம் விதிகள் எங்கும் இல்லை சட்டமாவது --- மண்ணாவது---.இரண்டு---



G.O. (D) NO. 125. Dt. 27.3.96 ன் படி சர்வே எண் TS No. 2327/a1 to a10 வார்டு எண் 3 பிளாக் 44 ஸ்ரீரங்கம் கோட்டம் 16 பன்மாடக்குடில்கள் G+3 கட்டுவதற்க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனுமதிபெற்றது  R. ஜெகநாத ஐயங்கார் அவர்கள்  வியாபரத்தை முதலில் தொடங்க ஏற்படுகளை முதலில் செய்துள்ளார்கள்.
சாலை அமைக்கவில்லை, கழிவு நீர் செல்ல ஏற்படு செயவில்லை,தெரு விளக்கு ஏற்படு இல்லை, சுகாதார சுத்த நீர் ஏற்படு இல்லை, பன்மாடக்குடியிருப்புகள் மட்டும் 300 க்கு மேல் கட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவிட்டது. சுகாதர கேடுகள் ஏராளம். கழிவு நீர் மல நீர் அனைத்தும் வடபகுதியில் பன்மாடக்குடில் அருகில் தேங்கியுள்ளது. இவை அணைத்தும் நிலத்தடி நீர் முழுதும் கெட்டுவிட்ட்து. பல முறை நகராட்சி நிர்வாகத்திற்கு எடுத்தி எழுதப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் மக்களுக்காக செயல்படவில்லை மிக தெளிவாகின்றது.எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டமாவது மண்ணாவது. அதுதான் ஸ்ரீரங்கம் நகராட்சி நிர்வாகம்.

இந்த மலகழிவு நீர் தேங்கி நிற்கும் இடம் ரயில்வே இடத்தில் தான். ரையில்வே பாதை அருகில். ரயில்வே பாதைக்கு மிகுந்த சேதம் ஏற்படுத்துகின்ற நிலையில் உள்ளது. ரயில்வே நிர்வாகமும் இந்த சீர்கேட்டை பற்றி கவலை படவில்லை.எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.










No comments:

Post a Comment