ஸ்ரீரங்கம் நகராட்சி அலுவலகத்தில் எவ்வாறு எல்லாம் சட்டத்திற்கு புறம்பாக , விதிகளுக்கு புறம்பாக , வேண்டும் என்றே மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள் என்பதற்கு ஒரு சான்று.----.
தகவல் அறியும் உரிமைசட்டத்தின்படி ஸ்ரீரங்கம் நகராட்சியால் அளித்த ந.க.எண் f1/6134/2007/ஸ்ரீ நாள் 5.11.2007ல் கடித இணைப்புகளில் (அ ) ரங்கா பிளாக் நான்காம் தளத்தில் 20 அடிக்கு 10அடி மற்றும் 10 அடிக்கு 10 அடி அளவில் கூடுதல் கட்டிடமும் (ஆ) அம்மன் பிளாக் நான்காம் தளத்தில் 13 1/2 அடிக்கு 8 அடி ஆர்சிசி கட்டிடமும் (இ) குமரன் பிளாக்கில் நான்காம் தளத்தில் 20 அடிக்கு 10 அடி அளவில் கட்டிடமும் கட்டப்பட்டவைகளை மாறுதலாக கட்டியுள்ள கட்டிடங்களை உடனே இடித்து அப்புறப்படுத்த வேண்டியது என்று அறிவித்து திரு R. ஜெகநாதன் 18 அம்மாமண்டபம் ரோடு, ஸ்ரீரங்கம் அவர்களூக்கு காலக்கெடு கொடுத்து சட்டப்பிரிவு 447ன் படி நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவித்தது.
பல்வேறு கடிதங்களில் எங்கள் சங்கம் எழுத்து மூலமாகவும் நேரடியாகவும் தெரிவித்த்தின், மேற்கொண்டு ஸ்ரீரங்கம் நகராட்சி செயல்படாததால் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு உத்திரவு 11.4.2009 ல் பெறப்பட்டது. இந்த முறையீட்டிலும் மேற்ப்படி பெண்ட் ஹவுஸ் சம்பந்தமாக தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உயர்நீதி மன்றத்தின் உத்தரவை மேற்கொண்டு ஸ்ரீரங்கம் நகராட்சி அலுவலகத்தில் நடத்திய கண் துடைப்பு நாடகத்திலும் திரு ஜெகநாதஐய்யங்கார் அவர்களூக்கு அனுப்பப்பட்ட தாக்கீதுகளிலும் மேலே கூறப்பட்ட பெண்ட் ஹவுஸ்கள் சம்பந்தமாக உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. அனுமதியற்ற கட்டிடங்கள் கட்டுபொழுது விழயத்துடன் வேடிக்கை பார்த்துவிட்டு இப்பொழுது கண்துடைப்பு நாடகம்----
ரெங்கா கட்டிட்த்தின் பெண்ட் ஹவுஸ் கட்டிடத்திற்க்கு ஒரு விலாசமற்ற எந்த உரிமையும் இல்லாத ஒரு வெளி நபரிடம் 6.7.2009 அன்று வரி விதிப்பிற்க்காக மனு ஒன்றைப் பெற்று , அந்த மனுவில் எந்த விதமான வேண்டிய தகவலும் இல்லாத நிலையில்,. சட்டத்திற்க்கு புறம்பான தவறான ஒரு பதிவு பத்திரத்தினை வைத்து வரி விதித்துள்ளது
.
இந்த 6.7.2009 ஒரு விலாசமற்ற எந்த உரிமையும் இல்லாத ஒரு வெளி நபரிடம் பெறப்பட்ட மனுவின் பேரில், அடுத்த நாளே 7.7.2009 அன்று ஸ்ரீரங்கம் நகராட்சி அலுவலகத்தில் மிகமிக அவசரமாக எந்த ஆய்வும் இல்லாமல் செயல்பட்டு வரிவிதிப்பு செய்யப்பட்டுள்ளது கண்டு அவர்களின் அந்த அலுவலர்களின் உள்ளீடு, சுயலாப நோக்கம் என்பது தெளிவாகின்றது. இவர்களின் செயல்பாடு மிகவும் துரதிருஷ்டமானது.
.
தவறான கணக்கீட்டின் படி திருட்டுத்தனமாக சட்டத்திற்க்கு புறம்பாக ஞாய தர்மங்கள் இல்லாமல் 95,840 பங்குகளை (அடிமனை அளவு 53496 சதுர அடி) கட்டுமான தாரருக்கு பகுதி பகுதியாக பிரித்து விற்றுள்ளார்கள். இந்த மாதிரியான விற்பனைகள் செல்லாது என்பதை உயர்நீதி மன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பதின் விபரங்கள் அடங்கிய தகவல்கள் THE HINDU 30.8.2009 -ல் வெளியாகி உள்ளதின் நகல் ஸ்ரீரங்கம் நகராட்சி அனுப்பப்பட்டது..
இந்த உயர் நீதி மன்ற உத்தரவின் படி தவறான கணக்கீட்டு விற்ப்பனை செல்லாது என்பதும் அந்த பங்குகளை வீட்டின் உரிமையாளர்களுக்கே பகுத்து பதிவு செய்து தர வேண்டியுள்ளது. தவறான வழிய்யையே பின் பற்றி நடக்கும் நகராட்சி நிர்வாகம் இந்த உயர்நீதி மன்ற உத்திரவினை சட்டை செய்யாமல் வரி விதிப்பை செய்துள்ளது மிகவும் வேதனைக்கு உறியது மட்டுமில்லாமல் கேலிக்குறியதாகவும் உள்ளது.
அத்துடன் இந்த ஸ்ரீரங்கம் நகராட்சி நிர்வாகத்தில் அரசு சட்ட திட்டங்களுக்கு புறம்பாக செயல்பட்டு வந்த, வருகின்றவர்கள் மீது முறையான நடவடிக்கை எடுப்பார்களா? எடுக்கமாட்டார்கள். ஏன்? சட்டங்களுக்கும் விதிமீரலுக்கும் துணைபோவதையே முதலாக கொண்டுள்ளவர்கள் இதை தவிர வேறு என்ன செய்வார்கள்?
No comments:
Post a Comment