Tuesday, 3 May 2011

ஸ்ரீரங்கம் நகராட்சி----வரி விதிப்பீடு----இழப்பு நகராட்சி நிர்வாகத்திற்கு---தில்லுமுல்லு ஊழியர்கள் மெத்தனமா? இல்லை ---வருடத்திற்கு இரண்டு கோடி இழப்பு—10 வருடத்திற்கு சுமார் 20 கோடி நட்டம்...............


ஸ்ரீரங்கம் நகராட்சி----வரி விதிப்பீடு----இழப்பு நகராட்சி நிர்வாகத்திற்கு---தில்லுமுல்லு
ஊழியர்கள் மெத்தனமா?  இல்லை ---வருடத்திற்கு இரண்டு கோடி இழப்பு—10 வருடத்திற்கு சுமார் 20 கோடி நட்டம்...............

தாத்தாச்சாரியார் கர்டன் சுமார் 5 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களில் வரி இழப்பு சுமார் 10 லட்சம் கடந்த 10 வருட்த்தில்-----எனவே நகராட்சி மொத்தம் கணக்கீட்டு போடப்பட்டால் சுமார் 20 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது . நகராட்சி நிர்வாகம் எவ்வளவு எடுத்து சொன்னாலும் நடவடிக்கை எடுப்பது இல்லை.

பல கட்டிடங்கள் அனுமதி இல்லாமலே கட்டப்படுகின்றன். சென்னை சில்க்ஸ் கட்டிடம் உட்பட. நடவடிக்கை என்ற பெயரில் கட்டிடம் முடிந்த பிறகு கந்தொடைப்பு நாடகம் நட்த்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.

பல கட்டிடங்களுக்கு நோட்டீஸ் கொடுத்து பிறகு எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. நகராட்சி நிர்வாகத்திற்கு நட்ட்த்தை எற்படுவதுடன் நிறுத்தப்படுகின்றது.

பல கட்டுமானதார்ர்கள் பொது உபயோக இடத்தையும் விற்றுள்ளார்கள். பலர் பொது உப்யோக இடத்தை அப்பார்ட்மெண்ட் கட்டி விற்றுவிட்டார்கள். பலர் கடையாகக்கட்டி அலுவலகமாகவும் மற்றும் கடையாகவும் வைத்துகொண்டுள்ளார்கள்.

சொந்தவசூல் மட்டும் செவ்வனே செய்து கொண்டுள்ளார்கள் என்பது மட்டும் மிகத்தெளிவு. நகராட்சி நிர்வாகத்திற்கு இழப்பை மட்டும் ஏற்படுத்திகொண்டுள்ளார்கள்.

இந்த விபரங்களில் சிலவற்றை தகவல் அறியும் சட்டத்தின் பேரில் ஆதாரமாக பெறப்பட்டுள்ளது.

எந்த மேலதிகாரிகளுக்கும் தெறிவிக்கப்பட்டாலும் கடிதங்கள் கிடப்பில்தான். நடவடிக்கை என்பதே இல்லை.

வாழ்க ஜனநாயகம்.எத்தினை அன்னாஹஜாரே வந்தாலும் இந்த ஜனநாயகத்தை நிமிர்த்த முடியுமா?

No comments:

Post a Comment