ஸ்ரீரங்கம் நகராட்சி, தாத்தாச்சாரியார் கார்டன், ம்ம்பலச்சாலையில் ஜெகநாத அய்யங்கார் அவர்கள் 16 பன்மாடக்குடில்கள் கட்ட அனுமதி பெற்று கட்டிடங்கள் கட்டிமுடிக்கமுடியாத நிலையில் அனுமதி 6 வருடங்களில் காலாவதி 2002-லியே ஆகிவிட்ட நிலையில் அனுமதி யில்லாமலே, ரங்கா, பாலாஜி, அம்மன், அகிலாண்டேஸ்வரி, குமரன் ஆகிய கட்டிடங்களை கட்டியுள்ளார்கள். 2004-க்கு பிறகு இந்த கட்டிடங்களை கட்டியவர் வாஸ் கட்டுமானதார்ர் திரு சீனிவாஸன் அவர்கள். இந்த கட்டிடங்கள் அனைத்திலும் (அகிலாண்டேஸ்வரி தவிர) 5-வது மாடியாக பெண்ட் ஹ்வுஸ் கட்டி தங்கள் பொருப்பிலேயே வைத்துள்ளார்கள். அரசு சட்டதிட்டங்களுக்கு புரம்பாக.
இந்நிலையில் 16-வது கட்டிடமாக A-4 கட்டிடம் அனுமதியில்லாமலே 2009-ல் கட்டினார்கள். எங்கள் சங்கத்தின் மூலம் DIRECTOR OF TOWN AND COUNTRY PLANNIN-NG CHENNAI, THE COMMISSIONER MUNICIPAL ADMINISTRATION & WATER SUPLY CHENNAI,THE DISTRICT COLLECTOR TRICHRALLI, ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்ட்தின் பேரில் தடைசெய்யப்பட்டது.
இந்த கட்டிடம் பொது இட்த்தை அக்கிரமிப்புசெய்து கட்டப்பட்டுள்ளது என்பதை மிக தெளிவாக முன்பதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிட்த்தின் தென் புரம் பொது இடம் உள்ளது.இந்த பொது இட்த்தின் அளச்வானது 80 அடிக்கு 56 அடி யாகும் .ஆனால் தற்பொழுது இருப்பதாவது 80 அடிக்கு 53.5 அடியாகும். இதிலும் அம்மன் பிளாக் வடபுரம் பார்வை வைத்து கட்டப்பட்டது. ஆனால் இக்கட்டிடம் தென் புரம் பார்வை வைத்து கட்டப்படவேண்டும் அனுமதியின் படி. இந்த சூழ்நிலையில் அந்த அம்மன் கட்டிட்த்திற்கு முன் முகுப்புபகுதியாக 20 அடி திட்ட அனுமதி படி விடப்பட வேண்டும். அந்த 20 அடியய்யும் விடப்பட்டால் பொது இடம் மேலும் குறைவு ஆகும். அதாவது பொது இடம் 80 அடிக்கு 37 அடி தான் உள்ளது. எனவே இந்த கட்டிடம் கட்டப்படுமானால் பொது உபயோகம் வெகுவாக குறைந்துவிடும் என்பது தெளிவு,ஏற்கனவே பொது இடம் சுமார் 15,000 ச.அடி விற்கப்பட்டுள்ள நிலையில் இந்த தகிடுத்த்தம் வேலைகளும் திரு ஜெகநாத அய்யங்கார் அவர்களால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த அளவீடுகள் உயர் நீதிமன்ற முறையீட்டு மூலம் இடப்பட்ட உத்திரவின் படி மாநகராட்சி அளந்து அளிக்கப்பட்ட அளவீடுகள் ஆகும்.
இந்த கட்டிட கட்டுமானதார்ர் சென்னை உயர் நீதி மன்றத்தில் கட்டிடம் கட்ட அனுமதி கேட்டு முறையீடு செய்துள்ளார்கள். அந்த முறைய்யீட்டிற்கு ஆணையர் திருசிராபள்ளி நகராட்சி அவர்கள் பதில் உயர் நீதி மன்றத்தில் அனுமதி அளிக்க இயலாது என்று தெரிவித்து சமர்ப்பித்துள்ளார்கள்.
ஏமாற்றா, எந்தெந்த் வழிகளில் ஜெகநாத அய்யங்கார் முயர்ச்சிக்கின்றார் பார்த்தீர்களா!
ஆனால் தற்பொழுது இன்று 15-05-2011 தேதியில் அந்த A-4 கட்டிடம் அனுமதியில்லாமலே தொடர்ந்து கட்டப்பட்டுவருகின்றது. இவை யாருடைய தயவில் என்பது தெறியவில்லை. தற்பொழுது அனுமதி இல்லாத நிலையில் அந்த கட்டிடம் கட்டுவதை நகராட்சி நிர்வாகம் ஏன் பார்த்துகொண்டு இருக்கின்றது.? ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ?
No comments:
Post a Comment